(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அப்படியா சரி சரி ஆனா சைவ உணவும் சாப்பிட கத்துக்க புரியுதா”

   

சரியென தலையாட்டிவிட்டு மர்மமாக சிரித்தவள் பாட்டியை பார்த்து கண்களாலே எதையோ பேசிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

   

அடுத்து நந்தினி 5 வகை சாதத்தையும் பரிமாறி அதற்காக உருளைக்கிழங்கு கறியும் அரிசி வடாமும் சேர்த்து பரிமாறினாள்.

   

”ரொம்ப நல்லாயிருக்கும்மா இந்த 5 வகை சாதமும் நல்லாவே ஊறியிருக்கு. கலவையும் காரமும் சரியா இருக்கு. இந்த சாதத்திற்கு ஏத்தபடி இந்த வடாமும் ருசியா அமைஞ்சி இருக்கு. நீயும் போய் சாப்பிடு” என சொல்லவும் அவளும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு உண்ண ஆரம்பித்தாள். 

   

மதியம் சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் சென்றுவிட நந்தினி மட்டும் தோட்டத்திற்கு சென்று காலாற நடந்தாள். அவளைக்கண்டு ஆசையாக ஓடிவந்த ரிஷியை விட்டு விலகி நின்றாள்

   

”என்னாச்சி ஏன் என்னை விட்டு போற”

   

“அண்ணா திட்டினாரு”

   

“ஆரம்பிச்சிட்டானா இரு இப்பவே அவனை என்ன செய்றேன் பாரு” என சொல்லிவிட்டு அர்ஜூனுக்கு போன் பண்ண தடுத்தாள் நந்தினி

   

”அத்தான் வேணாம்”

   

”எதுக்கு அவன் உன்னை திட்டறான் சொல்லு”

   

”அது நான் உங்க கூட காலையில ரூம்ல” என விட்டு விட்டு பேசவும் அவளை ஒரே எட்டில் நெருங்கி அவளை தன்னுடன் இழுத்து அணைத்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.