(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இருக்கலாம் ஆனா இந்த சமையல் போட்டி வைச்சது எதுக்கு உன்னோட திறமையை காட்டதானே கல்யாணம் ஆனபின்னாடி நீ சமைக்கனும்னு கட்டாயம் இல்லை. இந்த 1 மாசம் நீ என்ன செய்ற எப்படி சமைக்கறன்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த போட்டியே சரியா இப்படி நீ இந்த போட்டியை சாதாரணமா நினைச்சா எப்படி தோத்திடுவ”

   

“சாரி தாத்தா காலையில அதிகமா எதுக்கு செய்யனும்னு நினைச்சேன்”

   

“நானும் அதிகமா செய்ய சொல்லலையேம்மா ஏதாவது ஒரு டிஷ் பண்ணுன்னு சொன்னேன். அதுக்காக இப்படி சூப் கொண்டு வரவேணாம் புரியுதா சரி எல்லாருக்கும் பரிமாறும்மா” என சொல்லவும் அவளும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு அமர்ந்தாள்.

   

அடுத்து வந்தனா வந்தாள். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவள் காலையிலேயே புளியோதரை செய்திருந்தாள். அதற்கு கல்தோசையும் சட்னியும் செய்திருந்தாள்.

   

”என்னம்மா இது காலையில புளியோதரை”

   

“ஆமாம் தாத்தா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதான்”

   

“ஓ சரி சரி அது என்ன கல் தோசையா”

   

”ஆமாம்”

   

“பரவாயில்லையே இன்னிக்கு 2 டிஷ்ஷோட முடிச்சிருக்க” என பாராட்டவும்

   

“நீங்கதானே தாத்தா சொன்னீங்க அதான் கொஞ்சமா செய்தேன்”

   

என சொல்ல அவரும் சாப்பிட ஆரம்பித்தார் புளியோதரை இன்னும் சாதத்துடன் ஒட்டவில்லை. தனியாக தெரிய அவர்

   

”இன்னும் சரியாக காரமும் புளிப்பும் ஊறலைம்மா வெறும் சாதம் தனியா மசாலா தனியா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.