(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அப்படியில்லை நெய் ப்ரிட்ஜ்ல இருக்கு அதை பயன்படுத்தனும்னு அவளுக்கு தோணலை ஏன்னா அவள் அதை சாப்பிடலை அதை பயன்படுத்தி பழக்கமில்ல அதான் காரணம்”

   

”சரி ஓகே அவள் ஏழை பொண்ணு அதனால தெரியலை மிச்சம் என்னாச்சி வந்தனாவோட அவளை சேர்த்துட்டிங்களே தாத்தா”

   

“ஆமாம் ரெண்டு பேருமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்காங்க ஒரே மாதிரிதான் சமைக்கறாங்க”

   

“இல்ல என் ஆளு சமையல் வந்தனாவை விட நல்லாயிருந்திச்சி”

   

“டேய் உன் ஆளுங்கறதுக்காக ஓவரா பண்ணாத சரியா நான் கரெக்டாதான் மார்க் போட்டிருக்கேன்”

   

”சரி தாத்தா நீங்க சொல்லுங்க நேத்து நடந்த போட்டியில யார் உங்க மனசை ஜெயிச்சது

   

”வந்தனாதான்”

   

“இது என்ன தாத்தா இப்படி சொல்றீங்க”

   

“ஆமாம்டா உண்மையிலயே அவளுக்கு இந்த போட்டியில ஜெயிக்கனும் உன்னை கைப்பிடிக்கனும்னுங்கற எண்ணம் இருக்கு அதனாலதான் அவள் கஷ்டப்பட்டு அத்தனை டிஷ்களை செஞ்சி அசத்தினா”

   

“மிச்ச பொண்ணுங்க”

   

“மிச்சம் யாரு சோனாவா அவள் ஒரு டிஷ்தான் செய்றா அதுவும் மேல்நாட்டு பாணியில செய்றா. அவள் செய்றது பார்க்கவே கஷ்டமாயிருக்கு அவளை பொருத்தவரைக்கும் இந்த போட்டியை அவள் துச்சமா நினைக்கறா உன் அப்பாயிருக்காரு தனக்கு நிறைய சொத்துக்கள் இருக்கு இந்த சமையல் எல்லாம் ஒரு விசயமே இல்லைன்னு நினைக்கறா சமைச்சது போக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.