(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தாய் ரெசிபி உணவை பரிமாறினாள். முதலில் சாப்பிட்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை. மறுபடியும் சாப்பிட்ட பின்பு

   

”வித்தியாசமா இருக்கும்மா” என சொல்லவும் அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டான் ரிஷி அதனால் சோனா தனக்காக பரிமாற வந்ததை பார்த்து கொஞ்சமாக வைக்கும் படி சொன்னான். ஆனாலும் தினகரன், கருணாகரனுக்கு தாய் ரெசிபி பிடிக்கும் என்பதால் அவர்கள் நிறைய எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு போக மீதி இருப்பதை மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு அமர்ந்தாள். அடுத்து வந்தனா தான் செய்ததை பரிமாறவும்

   

”நல்லாயிருக்கும்மா” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்க

   

”அவ்ளோ தானா தாத்தா”

   

“வேற என்னம்மா சொல்லனும்”

   

“இல்லை தாத்தா நேத்து நிறைய சொன்னீங்க இன்னிக்கு இவ்ளோதான் சொல்றீங்க”

   

“நேத்து நீ நிறைய தப்பு பண்ண அதனால சொன்னேன். இன்னிக்கு நீ எல்லாம் சரியா செய்ததால குறை சொல்ல வாய்ப்பு கிடைக்கலை. அதான் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டேனே அதுவும் ஒருவிதமான பாராட்டுதானே போம்மா மத்தவங்களுக்கும் பரிமாறு” என சொல்லவும் அவளும் அனைவருக்கும் பரிமாறினாள்.

   

அடுத்து மிருதுளா தான் செய்த பிரைட் ரைஸை பரிமாறிவிட்டு அவளும் தான் காலையில் செய்த நான் வெஜை சாப்பிட ஆரம்பிக்க தாத்தா

   

”இந்த வீட்ல நான்வெஜ் சாப்பிடலாம் ஆனா வெள்ளிகிழமை சனிக்கிழமை செய்யக்கூடாதும்மா சாப்பிடவும் கூடாது”

   

”தெரியும் தாத்தா செஞ்சது வீணாக கூடாதுன்னுதான் சாப்பிடறேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.