(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“இல்லை நீ எங்களோட ஒட்டமாட்டேங்கற கம்பெனி மேல இருக்கற பாசம் நேசம் எங்க மேல இல்லை எங்களை விடு ரிஷி மேல இல்லை. நீ எங்களோட பேசினாலும் கம்பெனி பத்திதான் பேசற தனியா இருக்கறப்பவும் கம்பெனிக்கு போன் பண்ணி பேசற உனக்கு கம்பெனிதான் முதல் விருப்பமா இருக்கு உன் கவனம் எல்லாம் அங்கதான் இருக்கு இங்க இல்லை. அதனால ஏதோ கடமைக்கு செய்யனுமேன்னு செய்றியே தவிர விருப்பத்தோட எதையும் செய்யமாட்டேங்கற. 

   

இப்ப உதாரணத்துக்கு நீ மட்டும் தான் இந்த போட்டிக்கு வந்தாலும் உடனே உன்னை நான் செலக்ட் பண்ணியிருக்க மாட்டேன் இதே மாதிரி 1 மாசம் தங்க வைச்சி போட்டி வைச்சிதான் செலக்ட் பண்ணியிருப்பேன் அந்த மாதிரிதான் இப்பவும் நீயே நினைச்சிக்க. நீ என்ன செஞ்சாலும் அது இந்த குடும்பத்துக்கும் பிடிச்ச மாதிரியிருக்கனும். ஏன்னா நான் ரிஷியை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பமாட்டேன். 

   

அதனால உன்னால முடிஞ்சவரைக்கும் மத்தவங்களோட ஒத்து வாழப்பாரு. உனக்காக மட்டுமே கிரீன் டீ போடறது நல்ல விசயம் அதுக்காக அடுத்தவங்களுக்கு போடக்கூடாதுன்னு நினைக்காத இந்த மாசம்தான் இதெல்லாம் நான் உன்னை சமையல் செய்ய சொல்றது உனக்கு பிடிக்கலைன்னா தாராளமா நீ சொல்லிடலாம்” என கேட்க சோனா தாத்தாவிடம்

   

”இல்லை தாத்தா எனக்கு நீங்க சொல்ல வர்றது புரியுது நான் என்னை மாத்திக்கறேன்”

   

“சரிம்மா போ போய் உட்காரு” என சொல்ல அவளும் சென்று அமர்ந்தாள்.

   

அடுத்து வந்தனா மதியம் நந்தினி எப்படி 5 வகையான சாதம் செய்தாளோ அதே போல இம்முறை அவள் 5 வகையான தோசைகளை செய்தாள் அதற்கு மேட்ச்சாக 5 வகையான சட்னிகள் செய்து வைத்தாள்.

   

முதலில் தாத்தாவிற்கு பரிமாறினாள். ஒரே பிளேட்டில் 5 விதமான தோசைகளான நெய் தோசை, ரவா தோசை, மசாலா தோசை, கல்தோசை, வெங்காய தோசைகளை வைத்துவிட்டு சிறிய கின்னத்தில் 5 வகையான சட்னிகளை செய்து வைத்தாள். அதைப்பார்த்து சிரித்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.