“அம்மா நான் வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன் இந்த 1 மாசம் மட்டும் லீவு எடுத்துக்கிட்டேன்”
“ஆமாம்டா இது என்ன ஸ்கூலா மே மாசம் பரிட்சை முடிஞ்சதும் லீவு எடுக்கறதுக்கு”
“அம்மா ப்ளீஸ் விடுங்க எனக்கு தூக்கம் வருது நான் போறேன்” என தாயிடம் இருந்து பால் டம்ளரை வாங்கியவன் அதை குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான். அவன் சென்றதும் சித்தி ரிஷியிடம்
”ரிஷி இனிமேல உனக்கான நட்ஸ்பாலை நீயே போய் வாங்கிக்க தினமும் உனக்காக என்னால என் பையன்களோட சண்டை போட முடியாது. புரியுதா”
“சரி சித்தி” என சொன்னவன் நந்தினியிடம்
”நட்ஸ் பால் ரெடிபண்ணி என் ரூம்ல கொண்டு போய் வைச்சிடு நான் குடிச்சிக்கிறேன் அப்பதான் எந்த பிரச்சனையும் வராது சரியா இந்தா இந்த பாலை கொண்டு போய் என் ரூம்ல வைச்சிடு” என்றான். அவளும் சரியென அதை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு செல்ல பின்னாடியே செல்ல முயன்ற ரிஷியை தடுத்தார் தாத்தா
”வேணாம்டா தப்புடா”
”போங்க தாத்தா”
“வேணாம்டா”
“தாத்தா ப்ளீஸ் தாத்தா ப்ளீஸ்” என அவரை விட்டு ஓடினான் ரிஷி. அவனின் செயலை கண்டு பயந்தவர் உடனே அர்ஜூனுக்கு போன் செய்தார்
”ஹலோ சொல்லுங்க தாத்தா”