அவள் வீட்டில் செல்லம் தான்! அதுவும் அர்ச்சனா எப்போதுமே மகளுடன் நல்ல தோழி போல தான் பழகுவாள். மேலும், சரவணனின் மறைவுக்கு பின் அர்ச்சனாவும் இந்துவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து இன்னும் நெருங்கிய உறவாகி இருந்தார்கள்!
கல்யாணம் முடிந்ததும், பழக்க வழக்கம் சம்பிரதாயம் என்றெல்லாம் பார்க்காமல் காஞ்சனா திருமண மண்டபத்தில் இருந்து அர்ச்சனாவையும் அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். அர்ச்சனாவிற்கும் மகளை அவள் கணவனுடன் அவனின் வீட்டில் ஜோடியாக சேர்ந்து பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
அர்ச்சனா தனியாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், காஞ்சனா அர்ச்சனாவையும் அவர்களின் வீட்டிலேயே தங்க சொன்னாள். ஆனால் அர்ச்சனா அதை ஏற்கவில்லை.
"அப்பப்போ வரேன்! ஒரேடியா இங்கேயே வந்து இருந்தா நல்லா இருக்காது,” என அர்ச்சனா சொன்னதை மறுத்து, இந்து, கீதா, வீணா, காஞ்சனா என்று அனைவரும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கூட அர்ச்சனா மனம் மாறவில்லை.
தோழியை புரிந்துக் கொண்டவளாக லக்ஷ்மி,
"காஞ்சனா, அர்ச்சனா சொல்றதும் சரி தானே! இன்னும் கொஞ்ச நாள்ல பேரன் பேத்தி வரட்டும், அப்புறம் உங்க வீட்டிலேயே தான் டேரா போடுவா. இப்போ அவ அங்கேயே இருக்கட்டும். நானும் ஒரு வாரம் அவக் கூட தான் தங்கப் போறேன்," என்றாள்.
அதற்கு மேல் யாரும் அர்ச்சனாவை கட்டாயப் படுத்தவில்லை. அம்மாவின் மனநிலை புரிந்துக் கொண்டு அந்த முடிவை ஏற்றுக் கொண்டாலும், அப்படி அம்மாவை பிரிந்து வந்து வாழ்வது இந்துவிற்கு ரொம்பவே கடினமாக தான் இருந்தது!
ஒருவேளை சஞ்சீவும் அவளும் இப்படி சண்டைப் போட்டு கல்யாணம
{/f90filter}் செய்துக் கொள்ளாமல் ‘நார்மல்’ கல்யாணம் செய்துக் கொண்டிருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம்!
இப்போதோ, ஃபோனில் கூட அவளால் அர்ச்சனாவுடன் பேச முடியவில்லை. அவள் ஃபோன்
Why there is no update for more than a month?