செய்துப் பேசினால் சஞ்சீவிற்கு தெரியவா போகிறது, பேசாமல் பேசி விடலாமா என்று மனதில் எழுந்த எண்ணத்தை ஏனோ இந்துவால் செயலாற்ற முடியவில்லை. அதற்காக அவள் மீது அவளுக்கே கோபமாக வந்தது!
கீதாவிற்கு இந்துவின் ஒதுக்கத்திற்கான முழுக் காரணம் புரியவில்லை. ஆனால் அர்ச்சனாவும் இந்துவும் எந்த அளவிற்கு க்ளோஸ் என்பது அவளுக்கு தெரியும். இந்த பிரிவு எந்த அளவிற்கு தோழிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது! அதனால் இந்துவிற்கு கொஞ்சம் ‘ஸ்பேஸ்’ கொடுத்து அவளாகவே இயல்புக்கு திரும்ப காத்திருந்தாள்!
கொஞ்ச நாட்களில் இந்துவே சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதனாலேயே இந்துவை தொல்லை செய்யாமல் அவள் போக்கில் விட்டு வைத்திருந்தாள்.
ஆனாலும், தன் பங்கிற்கு, இந்து புது இடத்தில் இயல்பாக செய்யும் உதவியாக, இந்துவிற்கு பிடித்த உணவு வகைகளே அந்த வீட்டு சமையலில் எப்போதும் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டாள்!
அன்றைய டின்னரும் அப்படி தான் இருந்தது!
குடும்பத்தினர் அனைவருமே டைனிங் ரூமில் இருந்தாலும், இந்துவிற்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு நடந்துக் கொண்டிருந்தது!
“உனக்கு பிடிச்ச ஃபிஷ் ஃப்ரை,” என கீதா ஆரம்பிக்க, சில நிமிடங்கள் கழித்து காஞ்சனா,
“என்ன இவ்வளவு கம்மியா சாப்பிடுற இந்து, இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடு,” என செல்லம் கொஞ்சி அவளே சாதம் எடுத்து இந்துவிற்கு கொடுக்க, அடுத்து கண்மணி,
{/f90filter}
“இந்து அக்கா, உங்களுக்காக தான் இன்னைக்கு ஸ்பெஷல் பைனாப்பிள் ஸ்ரீகன்ட்,” என்று சொல்ல...
நான்-ஸ்டாப்பாக போய் கொண்டிருந்த செல்லம் கொஞ்சல்ஸ் சஞ்சீவின் காதில் புகையை
Why there is no update for more than a month?