வரவழைத்தது!
இத்தனைக்கும் இந்து அதிகம் பேசக் கூட இல்லை! ஆனாலும் அனைவருமே அவள் மீது ஓவராக செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்!
அவனுக்குமே அவளிடம் அப்படி கொஞ்ச ஆசையாக தான் இருந்தது! அவனால் முடியாததை மற்றவர்கள் செய்வதை ஓரளவிற்கு மேல் தாங்க முடியாமல், "அண்ணி, இன்னைக்கு யார் சமையல்?" என கீதாவிடம் கேட்டான் சஞ்சீவ்.
இந்துவிற்கு இன்னுமொரு மீன் வறுவலை எடுத்து வைத்துக் கொண்டே, "நானும் கலாவும் தான் சஞ்சீவ். ஏன்??" என்றாள் கீதா.
"இப்படி எல்லா பொறுப்பையும் நீங்களே வச்சுக் கிட்டிருந்தா எப்படி அண்ணி? உங்க ஜூனியருக்கும் கொஞ்சம் ஷேர் செய்யலாம் தானே?" என்றான் சஞ்சீவ் இந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு!
"சஞ்சீவ், உனக்கு இந்து சமையல் சாப்பிடனும்னா நேரா சொல்ல வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு உன் அண்ணியை கேள்வி கேட்டு வம்புக்கு இழுக்குற?" என்றாள் காஞ்சனா புன்னகையுடன்.
இந்து சஞ்சீவ் தவிர மற்றவர்கள் அனைவரின் முகத்திலும் தானாக அந்த புன்னகை தோன்றியது!
"சஞ்சீவ், உனக்கு இந்து சமையல் அமிர்தமாவே இருக்கலாம்! ஆனால் நாங்க எல்லாம் கூட சாப்பிடனும்ல," என்றான் ராஜீவ் கேலியாக.
ராஜீவ் பல வருடங்களாகவே இந்துவிற்கு நல்ல நண்பன் என்பதால், அவனின் இந்த கேலி அவளை சீ
{/f90filter}
ண்ட,
"என் சமையல் நீங்க சாப்பிட்டதே இல்லையே ராஜீவ், அப்புறம் எப்படி நீங்க இப்படி கமெண்ட் சொல்லலாம்! நாளைக்கு நான் தான் சமையல் செய்ய போறேன். கீதா அக்காக்கு ரெஸ்ட்,"
Why there is no update for more than a month?