என்றாள் இந்து.
"நான் வரவே இல்லை இந்த விளையாட்டுக்கு!!! நாளைல இருந்து நான் ஆஃபிஸ்லேயே சாப்பிடுறேன்!!!"
"ரொம்ப தான் பந்தா காட்டாதீங்க ராஜீவ்!!!! இந்து எல்லா விஷயத்தையும் டக்குனு கத்துக்குவா. சமையல் என்ன பெரிய விஷயமா, அதெல்லாம் அவ ஈஸியா கத்துப்பா," என்றாள் கீதா.
"அது சரி!! ஆனால் இந்தும்மா, உனக்கு ஏன் இந்த வேலை எல்லாம்? புது பொண்ணு... கொஞ்ச நாள் ஆனப் பிறகு பார்க்கலாம்," என்றாள் காஞ்சனா.
"நீங்க சும்மா இருங்க அத்தை! இந்து அக்கா அப்படியாவது அந்த ரூம்ல இருந்து வெளியே வந்தா சரி தான். என்னவோ அத்தான் அவங்களை ஜெயில்ல போட்டிருக்குற மாதிரில எப்போவும் உள்ளேயே இருக்காங்க," என்றாள் கண்மணி.
சட்டென்று சஞ்சீவின் தீர்க்கமான பார்வை இந்துவின் மேல் பதிந்தது. அதை சந்திக்க விரும்பாது, முகத்தை திருப்பி, கண்மணியிடம் சாம்பாரை அவள் பக்கம் தர சொன்னாள் இந்து!
🌼🌸❀✿🌷
அன்றிரவு, எப்போதும் போல் சஞ்சீவ் அவன் அறையிலும், இந்து அவளின் அறைக்குள்ளும் இருந்தார்கள்.
இந்துவிற்கு எப்போதுமே டைரி எழுதும் பழக்கம் உண்டு! முன்பெல்லாம் எப்போதாவது தோன்றினால் மட்டுமே எழுதுவாள். ஆனால் திருமணத்திற்கு பின் இரவு நேரங்கள் போர் அடிப்பதால், தினம் தினம் தன் மனதை எழுத்துக்களாக வடிவமைத்து எழுதுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.
அன்றும், டைரி எழுதும் பழக்கத்தை தொடர, டைர
{/f90filter}
ியை கையில் எடுத்து மனதில் இருப்பதை எழுத தொடங்கினாள். நடுவே, எதையோ யோசித்தப்படி மறுநாள் தேதியை பார்த்தவள் திகைத்துப் போனாள்! அது அவளின் அம்மாவின் பிறந்த நாள்! எப்போதும் இரவு பன்னிரண்டு
Why there is no update for more than a month?