என்றாள்!
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் பிரின்சஸ்... வெறும் பெட்டியை கொடு அதுவே போதும்...”
அப்போது தான் அருகே கடுகடு என்று நின்றிருந்த விஜயை கவனித்த கிருத்திகா,
“என்னடா விஜய் உர்ருன்னு நிக்குற????” எனக் கேட்டாள்.
“பிரின்சஸ், நான் மட்டும் தான் அவளை கீத்ஸ்ன்னு கூப்பிடுவேன்...” என்றான் விஜய் மெல்லிய கோபத்துடன்!
“ஐ, இது நல்ல கதையா இருக்கே... நீ என்ன காபிரைட்டா வாங்கி வச்சிருக்க? நானும் கீத்ஸ்ன்னு தான் கூப்பிடுவேன்... ஷீ இஸ் மை ஃப்ரென்ட்... நீ இன்னும் நிறைய பேர் வச்சிருக்கியே என்னது அது, செல்லம் வெல்லம் etc etc அதை எல்லாம் யூஸ் செய்துக்கோ...”
“க்ர்ர்...”
கீதா விஜய் பக்கம் பார்க்க, கிருத்திகா,
“என்னடா சத்தம் போடுற?” என்றுக் கேட்டாள் (மிரட்டினாள்).
“அம்மா தாய்மார்களே நான் சத்தம் எதுவும் போடலைமா... இந்த குடும்பத்துல முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்ஜியமா போச்சு... இந்த தியாகு பையன் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவான்னு பார்த்தா அவன் என்னை விட அதிகமா கூஜா தூக்குறான்...”
“இது தான் உனக்கும் சரி பட்டு வரும் டா அண்ணா... அதையே மெயின்டெயின் செய்... ஷிவாவும், விஷ்ணுவும் அடுத்து லைன்ல இருக்காங்க பாரு, அவங்களுக்கும் நல்லா ட்ரெயினிங் கொடுத்து வை... அப்போ தான் சரியான அண்ணிஸ் செலக்ட் செய்வாங்க... நாம நம்ம குடும்பத்து ட்ரெண்டை மெயின்டெயின் செய்ய முடியும்...”
“க்கும், அது தான் குறைச்சல்...”