ஒருவழியாக விஜய், கீதா, சிவகாமி, ரங்கராஜன், சிவா, விஷ்ணு என அனைவரிடமும் பேசி, செல்லம் கொஞ்சி, கலாட்டா செய்து முடித்து விட்டு கிருத்திகாவும், தியாகுவும் கிளம்பினார்கள்...
காரிலேயே பயணம் செய்து கெஸ்ட் ஹவுசை அடைந்தவர்களுக்கு அடுத்து வந்த நாட்கள் வந்ததே தெரியாமல் ஓடி மறைந்தன...
சென்னை திரும்பும் முன் வேரூர் செல்வதாக அவர்கள் வைத்திருந்த திட்டத்தில் சின்ன மாற்றம் செய்து மதுரை செல்வதாக சொல்லி தியாகு ஹோட்டலில் ஒருவரை சந்தித்து பேசியது கிருத்திகாவிற்கு பெரிய ஆச்சர்யமாக இருக்கவில்லை... அவன் என்ன செய்கிறான் என்று அவளால் ஊகிக்க முடிந்தது...
ஆனால் வேரூர் செல்லும் போது அவர்களுடன் ஒரு போலீஸ்காரரும் வந்ததை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை...
அவள் என்ன என்பது போல அவனை பார்க்க, கண்ணடித்து சிரித்தான் அவன்...!
சர்ப்ரைஸ் தரப் போகிறாராம்...!
🌼🌸❀✿🌷
வேரூரில் வெற்றி, மிருதுளா, ராஜம்மாள் மூவரும் அவர்கள் இருவரையும் அன்புடன் வரவேற்றார்கள்...
“நீ தானா கீதா சொன்ன டெரர் கிருத்திகா? என்ன ஒரு டெரரையும் காணும்????” என்று மிருதுளா கேட்க,
“அதெல்லாம் கீத்ஸ் அண்ணி ஸ்பெஷல்... உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க, ஸ்பெஷல் பேகேஜ் அரேஞ் செய்திடுவோம்...” என்றாள் கிருத்திகா...