“வேண்டாம்மா, இங்கே உங்க அண்ணாவோட ஸ்பெஷல் டெரரே போதும் போதுங்குற அளவுக்கு இருக்கு...”
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த தியாகு, ஒரு சாவியை எடுத்து வெற்றியிடம் நீட்டினான்...
“என்ன சாவி இது?” புரியாமல் கேட்டான் வெற்றி.
“இது மதுரையில மெயின் ஸ்ட்ரீட்ல இருக்க ஹோட்டல் சாவி... உங்களுக்காக உங்க தங்கையோட அன்பு பரிசு,” என்றான் தியாகு.
இதை முன்பே புரிந்து வைத்திருந்த கிருத்திகா அமைதியாக இருந்தாள்.
“இல்லை இதெல்லாம் வேண்டாம்...” என மறுத்தான் வெற்றி.
“அப்படி வேண்டாம்னு சொல்லாதீங்க வெற்றி... இது கீர்த்தியை சொந்த தங்கைக்கு மேல அப்படி பத்திரமா பார்த்துக்கிட்டதுக்காகன்னு சொல்லி உங்க அன்பை ஒரு ப்ராபர்ட்டியில சுருக்க நான் விரும்பலை... இது உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக நாங்க தரது... இப்படி ஒரு ரிமோட் ப்ளேஸ்ல உங்க வாழ்க்கையை அடைச்சு வைக்கனுமா? ஒருவேளை ஏதாவது எமோஷனல் அட்டாச்மென்ட் இருக்குமோன்னு அம்மாவை கேட்டேன், அதெல்லாம் இல்லைன்னு சொன்னாங்க...”
தியாகு சொன்னதைக் கேட்டு வெற்றி ராஜம்மாவை பார்த்து முறைத்தான்...
“கோபப்படாதீங்க வெற்றி... உங்களை எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சு செய்றோம், ஏன் நீங்க தப்பா நினைக்குறீங்க?“
“இல்லை தியாகு இதெல்லாம் வேண்டாம்...”