(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 01 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

வீட்டினுள் இருந்து சுறுசுறுப்பான நடையுடன் வெளியே வந்த உதய், நேராக தன் மெர்சிடஸ் பென்ஸ் பக்கம் சென்றான். காரின் பின் சீட்டின் கதவை பவ்யமாக அவனுக்கு திறந்து விட்ட டிரைவரிடம்,

   

"இன்னைக்கு நானே டிரைவ் செய்ய போறேன் முருகா. கிவ் மீ தி கீ," என்றான்.

   

"இல்லை சார்... அம்மா..."

   

தயக்கத்துடன் இழுத்தப்படி பேசிய முருகனின் தோளில் நட்புடன் கை போட்டுக் கொண்ட உதய்,

   

"கம் ஆன் முருகா! அம்மா கேட்டா என்ன சொல்லனும்னு உனக்கு தெரியாதா?" என்றான்.

   

"இல்லை சார். போன வாரம் அம்மா ரொம்ப கோபப்பட்டாங்க... இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்."

   

"ப்ச்... சரி, அம்மா சொல்ற மாதிரி நடந்தா மட்டும் உனக்கு வேலை இருக்கும்னு யார் சொன்னது? அப்பப்போ நான் சொல்றதையும் கொஞ்சம் கொஞ்சமாவது கேட்கனும்..."

   

முருகன் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக முழிக்க,

   

"சாவி..." என்று தன் வலது கரத்தை நீட்டினான் உதய்.

   

இதற்கு மேல் பேசி பலனில்லை என்பது தெரிந்ததால், தன சட்டை பையில் இருந்த சாவியை எடுத்து சின்ன எஜமானனிடம் கொடுத்தான் முருகன்.

   

"குட் பாய்!"

   

சின்ன சிரிப்புடன் காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்த உதய் இருபத்தியாறு வயதான வாலிபன். தென் இந்தியர்களுக்கே உரிய பிரவுன் நிறத்தில், ஆறடி உயரத்தில் 'ஹான்ட்சம்' 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.