என்று சொல்ல எல்லா தகுதியையும் உடையவன்.
சுருக்கமாக வைரமுத்து ஸ்டைலில் சொன்னால், பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்!
ஆனால் அந்த விலை உயர்ந்த உயர் ரக காரை ஒட்டிக் கொண்டிருந்த உதயின் முகம் சிந்தனையில் இருந்தது. சாலை பக்கம் அவன் கண்கள் இருந்தாலும் அவனின் கவனம் அதில் இல்லை என்பது புரிந்தது.
அவனின் முழு மனமும் அவளிடம் இருந்தது....
அவளை மீண்டும் பார்க்க போகிறான்!
காரை வலதுப் பக்க சாலையில் திருப்பியவனின் கண்ணில் டேஷ்போர்டில் இருந்த சின்ன பிள்ளையார் பட்டார். அதில் பொன் நிற எழுத்துக்களில், 'நதி எம்படட் சாப்ட்வேர் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட்' என்று எழுதப் பட்டிருந்தது.
அது அவனுடைய கம்பெனி... அவளுடைய பெயரை மற்றவருக்கு புரியாத வண்ணம் சுருக்கி அவன் வைத்த பெயர்... பிள்ளையார் அவளுக்கு பிடித்த கடவுள்...
கைகள் ஸ்டீயரிங்கில் இருக்க அவனின் மனம் தானாக பின்னே சென்றது... ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்தது அது...
❀✿❀✿❀✿
உதய் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, பொறியியல் கல்லூரிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த நேரம்... அவனின் பெரியப்பா மகன் சரத் படிக்கும் புகழ் பெற்ற, நம்பர் ஒன் கல்லூரி எனும் அளவுக்கு பிரசித்தி பெற்ற ஏஏஆர் கல்லூரியில் அவனுக்கும் அட்மிஷன் கிடைத்திருந்தது.
சரத் உதயை விட மூன்று வயது பெரியவன் என்பதால் அந்த ஆண்டு நான்காம் வருடத்தில்