(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

இருந்தான். எனவே உதய் சீனியர்கள் பற்றியோ, ரேகிங் பற்றியோ கவலை பட அவசியமில்லாமல் இருந்தது.

   

அடுத்த நாள் கல்லூரியின் முதல் நாள்! அதனால், அன்று பய பக்தியுடன் கடவுளை வணங்க கோவில் வந்திருந்தான். முழு மனதுடன் கடவுளை வணங்கி விட்டு, கோவிலை விட்டு அவன் வெளியே வந்த போது, அதிசயத்திலும் அதிசயமாக சென்னையில் மழை பொழிந்தது....

   

வெயிலை தணிக்க வந்த கோடை மழை....!

   

தன் மேல் பட்டு சிதறிய ஒன்றிரண்டு நீர் துளிகளின் தீண்டலை ரசித்தப்படி, டிரைவர் தன் காரை எங்கே நிறுத்தி இருக்கிறார் என்ற கேள்வியுடன் தேடியவனின் கண்களில் அவள் பட்டாள்!

   

சிறு குழந்தைப் போல் மழைத் துளிகளை கைகளில் பிடித்து சிதற விட்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

   

பனியில் நனைந்த ரோஜா மலர்!!!

   

அவளை பார்த்த உடன் அவனுக்கு அது தான் முதலில் தோன்றியது...

   

அவனின் கண்கள் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தன...

   

சராசரியான உயரம்... அவள் அணிந்திருந்த க்ரீம் நிற சுரிதாருக்கு ஏற்ற வண்ணம் இருந்த சிகப்பு நிற துப்பட்டாவை மடித்து அழகாக இரண்டு பக்கமும் அணிந்திருந்தாள்...

   

அழகிய வட்ட வடிவான முகம்...

   

அழகிய கண்கள்...

   

மழையை ரசித்து விளையாடிக் கொண்டிருந்ததால் அழகிய உதடுகளில் சின்ன மின்னல் கீற்றாக புன்னகை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.