தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதய் அப்போதும் அசைவதாக இல்லை!
“என்ன அண்ணி நீங்க!!! ஆமாம் சாஹித்யா செல்லம் எங்கே? சத்தத்தையே காணும்?” என குழந்தை பற்றி விசாரித்தான்!
“அத்தை கிட்ட இருக்கா. நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் சொல்லலை உதய்,” என துளசியும் தன் பாயின்ட்டிலேயே நின்றாள்!
“ம்ம்ம்ம்... என்ன கேள்வி கேட்டீங்க? சாரி மறந்துட்டேன்...”
“நீ தானே, மறக்குற ஆள் தான்!”
“நிஜமா தான் சொல்றேன். என்ன கேட்டீங்க?”
“இவ்வளவு பெரிய சென்னைல வேற எம்படட் என்ஜினியரே இல்லையா? பெங்களூர்ல இருந்து நந்து தான் வரணுமா?”
“டேய் உதய், துளசி பத்தி உனக்கு தெரியலைடா...” என்ற சரத்தை மேலே பேச விடாமல் ஒரு முறை முறைத்த துளசி,
“நீங்க இன்னும் இங்கே இருந்து கிளம்பலையா? முதல்ல கிளம்புங்க! நீங்க இருக்குறதால தான் உதய் எதுவும் சொல்ல மாட்டேங்குறான்,” என்றாள்.
“அது சரி!”
“கிளம்புங்க...”
சரத் உதய்க்கு சிரிப்புடன் டாட்டா காட்டி விட்டு சென்றான்.
“என்ன அண்ணி, அண்ணாவை இப்படி மிரட்டுறீங்க?”