சொல்லி... ம்ம்ம்.... அவ இந்த வேலை ஏத்துக்கிட்டதுல எனக்கும் சந்தோஷம். நீ சொன்னது போல கட்டாயம் இது அவளுக்கு நல்ல ரெஃப்ரெஷ்ஷிங்கா இருக்கும்... ஆனால் இதெல்லாம் நான் செய்திருந்தா பரவாயில்லை, நீ ஏன் செய்யனும்?”
“...”
“உதய், திரும்பவும் சொல்றேன், நான் உனக்கும் நல்ல ஃபிரென்ட். உன் நல்லது கெட்டதில் எனக்கும் பங்கு இருக்கு...”
“...”
“நந்து கம்பெனி பேர் சொல்ற வரைக்கும் அவ ஜாயின் செய்ய போறது உன் கம்பெனின்னு எனக்கு தெரியவே தெரியாது. உங்க அண்ணாக்கும் பெரிசா எதுவும் தெரியலை...”
“தெரியலையா? நல்லா சொன்னீங்க போங்க! நீங்க இருக்கும் போது நான் ஏன் உங்க ஃப்ரென்ட் விஷயத்துல இப்படி தலையை சுத்தி மூக்கை தொட்டேன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? அண்ணா கிட்ட காலேஜ் பத்தி பேச்சு எடுத்து மெதுவா பேசி பார்த்தேன்... அவன் தான் உங்களுக்கு இந்த ரெகமெண்டேஷன், ஷார்ட் கட் எல்லாம் பிடிக்காதுன்னு சொன்னான்...”
“ம்ம்ம்.... ஆனால் உதய் ஏன்? நந்து மேல உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை?”
“உங்க ஃப்ரென்ட் என்பதால்ன்னு வச்சுக்கோங்க...”
“ப்ச்... உண்மையை சொல்ல மாட்டேன்னு ஏதாவது விரதமா?”
“துளசி...” சரத்தின் குரல் மாடியில் இருந்து ஒலித்தது.
“வரேன் இருங்க...” என்று கணவனுக்கு பதில் சொன்ன துளசி, உதயிடம்,
“உதய், எனக்கு சுத்தி வளைச்சு பேச பிடிக்காது, இப்போ நேரமும் இல்லை, நேராவே கேட்கிறேன். டூ யூ ஹாவ் எனி ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் இன் நந்து?” என்றாள் சீரியஸாக!