“அதை அப்புறம் பேசுவோம்... இப்போ நாம பேசிட்டு இருக்க விஷயம் வேற!”
“உங்க கைமணத்தை ருசிக்க ஓடோடி வந்த என்னை இப்படியா சாப்பிட விடாமல் கஷ்டப் படுத்துறது?”
“அதே கேள்வி தான் எனக்கும் உதய்...”
“என்ன???”
“ஒண்ணுமே இல்லாத விஷயம்னு சொல்லிட்டு பேச்சை முடிக்காம, அதென்ன இப்படி பேச்சை மாத்துற வேலை, எஸ்கேப் ஆக ட்ரை செய்ற வேலை???? என்ன விஷயம் உதய்? உனக்கு என்னைப் பத்தி தெரியும். நாம இந்த உறவுமுறையை தாண்டி நல்ல ஃப்ரென்ட்ஸ் தானே? உண்மையை சொல்லு...”
துளசியின் பேச்சு மனதை அசைக்க, உதய் யோசிப்பவனை போல தட்டில் இருந்த தோசையை கையில் எடுப்பதும், மீண்டும் போடுவதுமாக இருந்தான்...
“அண்ணி, உங்களுக்கே தெரியும், உங்க ஃப்ரென்டோட அம்மா அப்பா இறந்துட்டாங்க...”
“ம்ம்ம்...”
“அவங்க மட்டும் அந்த ஊர்ல தனியா இருக்காங்க...”
“நந்து கிட்ட நான் தினமும் பேசுறேன். அவளை எத்தனையோ தடவை சென்னைக்கு வர சொல்லி கூப்பிட்டேன்... அவளுக்கு அங்கே இருக்க தான் பிடிச்சிருக்குன்னு தெளிவா சொல்லிட்டா...”
“நீங்க அதை நம்புறீங்களா?”