(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“நம்புறது நம்பாதது இருக்கட்டும். உனக்கு என்ன அவ மேல இவ்வளவு அக்கறை?”

   

“அதுல என்ன தப்பு? அவங்க உங்க ஃப்ரென்ட். எனக்கும் தெரிஞ்சவங்க!”

   

“சரி, ஆனாலும் அவ சந்தோஷமா இருக்கேன்னு தானே சொல்றா, அப்புறம் ஏன்?”

   

“ஜெனரல் சைகாலஜி அண்ணி. யோசிச்சுப் பாருங்க, அவங்க ஐ ஆம் ஆல்ரைட்டுன்னு சொல்றாங்க, ஆனால் எப்படி அவங்க எந்த மன பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும்?”

   

“ம்ம்ம்...”

   

“அவங்களுக்கு இந்த புது ஜாப் நல்ல மாற்றமா இருக்கும். அவங்களுக்கே தெரியாம மனசுல பாதிப்பு இருந்தாலும் இந்த இடம் மாற்றம் நல்ல உதவியா இருக்கும்.”

   

துளசி பதில் எதுவும் சொல்லாமல் உதயை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

   

துளசிக்கு பதில் சொல்லிவிட்டு யோசனையுடன் தோசையை சாப்பிடுவதில் முனைந்திருந்த உதய், சற்று கழித்தே துளசியின் அமைதியை உணர்ந்து, நிமிர்ந்துப் பார்த்தான்.

   

“என்ன அண்ணி, அமைதியா இருக்கீங்க? உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சா?”

   

“தெரியலை உதய்!”

   

“தெரியலையா? என்ன சொல்றீங்க?”

   

“நந்து என்னோட பெஸ்ட் ஃப்ரென்ட். இன்னைக்கு வரைக்கும் அவ என் கிட்ட எதையும் மறைச்சதில்லை. நானும் குடும்பத்தை தாண்டின விஷயம் எதையும் அவக் கிட்ட சொல்லாமல் இருந்தது இல்லை. ஆனாலும் எனக்கு அவளை எப்படியாவது அங்கே இருந்து கிளப்பி வேற ஊருக்கு கூப்பிடனும்னு எல்லாம் தோணவே இல்லை... அதுவும் நீ செய்த மாதிரி, அவ வேலை செய்ற கம்பெனி வழியாகவே பேசி, இது நல்ல ஆப்பர்ச்யுனிட்டின்னு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.