சஞ்சீவிற்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. சரி அண்ணன் தான் பிறகு சொல்கிறேன் என்று சொன்னானே என நினைத்துக் கொண்டான்!
அதற்கு நடுவே, அஸ்வினி, “இந்து, நீ எப்போ கிளம்ப போற? சஞ்சீவ் உன்னை வீட்டுல ட்ராப் செய்வாரா?” என இந்துவிடம் வினவினாள்.
அஸ்வினி அந்த கேள்வியை கேட்டதும் இந்துவிற்கு மின்னல் வேகத்தில் ஒரு ஐடியா தோன்றியது.
“ஆமா ஆன்ட்டி, பாவம் சஞ்சீவ்... எனக்காக அவ்வளவு தூரம் வந்துட்டு அப்புறம் திரும்ப அடையார் போகனும்,” என்றாள்.
“அடடா, ஏன் அப்படி? நீ வேணும்னா எங்க கூட வாயேன்...” என இந்து எதிர்பார்த்த பதிலையே அஸ்வினி சொல்ல, ரகசியமாக சஞ்சீவை பார்த்தாள் இந்து!
சஞ்சீவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவனின் பொறாமையை மனதில் ரசித்த இந்து, இன்னும் ஒரே நாள் தான் செல்லம் என்று மனதில் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டாள். அப்படியே அஸ்வினியிடம்,
“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி,” என்றாள்.
சஞ்சீவிற்கு கோபம் பொங்கியது. ‘அஸ்வினி தான் ஏதோ மரியாதைக்காக கேட்டால், கணவனுடன் போகிறேன் என்று சொல்லாமல்... இவள் ஏன் இப்படி இருக்கிறாள்...’ என மனதுக்குள் குமைந்தவன், நேரில்,
“என்னை போலவே பிரசாத்துக்கும
{/f90filter}
் கஷ்டம் தானே. பரவாயில்லை நானே இந்துவை ட்ராப் செய்றேன்...” என்றான் சாதாரணக் குரலில்!
“அதெல்லாம் பிரச்சனை இல்லை சஞ்சீவ். நான் இன்னைக்கு ஃப்ரீ தான்,” என உடனே பிரசாத்