சொல்ல,
“ஆமா சஞ்சீவ், இவன் எல்லாம் உங்களை போல இல்லை... எப்போதாவது தான் ஆஃபிஸ் போவான்... மத்த நாள் எல்லாம் எங்களுக்கு கார் ஓட்டுற வேலை தான்,” என்றாள் அஸ்வினி கேலியாக!
“ஆன்ட்டி, அதை ஏன் கிண்டல் செய்றீங்க? எத்தனை பசங்க இதை எல்லாம் செய்றாங்க? பிரசாத் செய்றாரேன்னு சந்தோஷப் படுங்க,” என இந்து சொல்ல,
“அப்படி சொல்லுங்க அக்கா! அம்மாக்கு அண்ணாவுடைய அருமை புரியவே மாட்டேங்குது,” என்று அண்ணனுக்காக பிரியாவும் பேசினாள்.
“மருமகள்ன்னு ஒருத்தி வந்து காய்ச்சி எடுக்கும் போது தான் இந்த நல்ல மகனுடைய அருமை என் அம்மாக்கு தெரியும்,” என்றான் பிரசாத்.
“தெரியட்டும் தெரியட்டும்... சரி நாம கிளம்புவோமா?” என அஸ்வினி கேட்கவும், சரி என்று ஏற்றுக் கொண்டு அனைவரும் கிளம்ப தயாரானார்கள். சஞ்சீவ் பல்லை கடித்துக் கொண்டே இந்துவை முறைத்துப் பார்த்தப் படி நின்றான்.
அதை கவனிக்காததுப் போல, “சரி சஞ்சீவ், நான் அப்போ ஆன்ட்டி கூட கிளம்புறேன்,” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் இந்து.
சஞ்சீவ் பதில் சொல்லாமல் நிற்கும் போதே, அஸ்வினி அவனிடம்,
“நீ ரொம்ப லக்கி சஞ்சீவ்... இந்து என் வீட்டு மருமகளா வரனும்னு நான் ரொம்ப ஆசைப் பட்டேன்... எல்லாம் கடவுள் விருப்பம் போல தானே நடக்கும்! உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க...” என்றாள்!
புரியாமல், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும்
{/f90filter}
விதமாக அஸ்வினி பேச, இந்துவின் முகத்தில் புன்னகை தோன்றியது. அதை சஞ்சீவிற்கு தெரியாமல் மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள், ஆனாலும் அவளின் புன்சிரிப்பு அவனின் கண்களில் இருந்து தப்பவில்லை!