“ராட்சஸி!”
“யாரு நானா?”
“பின்ன வேற யாரு? ஆமா, ஏன் இந்த கொலவெறி பர்த்டே பிளான்?”
“ஹி ஹி.... நீங்க ப்ரொபோஸ் செய்தப்போ உங்க கிட்ட பதில் சொல்ல டைம் கேட்டிருந்தேன் இல்லையா, அப்போ வீணா உங்க பர்த் டே அன்னைக்கு யெஸ்ன்னு சொல்லி உங்களை சந்தோஷப் படுத்த சொன்னா... ஆனால் அதுக்குள்ளே தான் என்னெனவோ நடந்துப் போச்சே, சரி, நமக்குள்ளே எல்லாம் சரி ஆகுறது உங்க பர்த்டேக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சேன்...ஆனாலும் எல்லாம் இப்படி தீபாவளி பட்டாசு போல புஸ்ஸுன்னு போயிடுச்சு...”
“நல்லா நினைச்ச போ....” என்ற சஞ்சீவின் அணைப்பு இன்னமும் இறுக்கமாகிப் போனது.
“சரி, அதெல்லாம் போகட்டும், வா டார்லிங், முதல் இரவுன்னு தான் இருக்கனும்னு இல்லையே, நாம முதல் காலை செலிபரேட் செய்வோம்...”
“ஹலோ, நமக்குள் எல்லாம் சரி ஆச்சுன்னு உங்களுக்கு யார் சொன்னது?”
“என்னதிது புதுசா?”
வடிவேல் பாணியில் சஞ்சீவ் சொன்னதை கேட்டு புன்னகைத்த இந்து,
“உங்களுக்கு வேற ஏதாவது கேள்வி இருக்கா சஞ்சீ
{/f90filter}
வ்?” என்றாள்.
“கேள்வி எல்லாம் இல்லை...”
“குட்! இனி என் சான்ஸ், உங்களுக்கு நல்லா லெஃப்ட் அண்ட் ரைட் கொடுக்க தான் வெயிட் செய்துட்டு இருக்கேன்....”