“ஒரு தண்டனை யோசிச்சு வச்சிருக்கேன்... நீ என்னை மூணு மாசம் இப்படி...”
“ஓ நோ இந்து... ப்ளீஸ் அப்படி மட்டும் அதே பனிஷ்மென்ட்ன்னு சொல்லிடாதே! இன்னும் மூணு மாசம் என்ன, ஒரு நாள் கூட உன்னை விட்டு தள்ளி இருக்க என்னால முடியாது... அதெல்லாம் வேண்டாம்... வேற என்ன தண்டனை கொடுத்தாலும் சரி...”
“ஹு ஹும்ம்... அதே தண்டனை தான்... ஆனால் இப்போ இல்லை, எனக்கு எப்போ தோணுதோ அப்போ...”
“நீ ராட்சசியே தான்...”
“இது என்ன எப்போ பார் இப்படியே சொல்ற?”
“உனக்கு நான் ஒரு பேர் வச்சேன் ஞாபகம் இருக்கா? எ.மி.பி.அ.ரா...”
“ம்ம்ம்ம்....”
“அப்படின்னா, எனக்கு மிகவும் பிடித்த அழகிய ராட்சசின்னு அர்த்தம்...”
“ரொம்ப சின்ன பேரா இருக்கே...”
“என் அன்பு போல் இதுவும் ரொம்ப பெருசு....”
“அடடா... அது தான் எனக்கும் தெரியுமே! உனக்கு நான் வச்ச குரங்குன்ற பேரும் கூட சரி தான்... அது
{/f90filter}
இருக்கட்டும், ஏன் சஞ்சீவ், இவ்வளவு காதல் இருக்குறதா சொல்ற நீ இப்படி தனியா ரூம் எல்லாம் ரெடி செய்து வச்சிருந்த?”
“எது இந்த உன் ரூமா?”
“ஆமாம்...”