(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

“நானும் கூட தான்....” என காதலுடன் சொன்ன சஞ்சீவ், இந்துவின் முகத்தைப் பார்த்து விட்டு,

   

“சரி, நல்ல பிள்ளையா கேட்கிறேன், சொல்லு, உனக்கு என்ன கோபம்?”

   

“என்ன கோபமா? படவா, உன்னை கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு நான் ஒருத்தி கண்ணீர்ல் கரைஞ்சுட்டு இருந்தா, உனக்கு கல்யாணம் செய்துக்க வேற பொண்ணு கேட்குதா? எவ்வளவு திமிரு இருந்தா, இன்னொரு பொண்ணு பார்க்க கிளம்புவ? ஏதோ அத்தை என்னை மனசுல வச்சிருந்ததால் சரி, இல்லன்னா இந்நேரம் வேற பொண்ணை...”

   

“ப்ளீஸ் செல்லம், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே! உன்னை தவிர இன்னொருத்தியை நான் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்... உன் மேல் இருந்த கோபத்துல வேற பொண்ணு பார்க்க சொன்னது நிஜம் தான்... ஆனால் அது நான் கல்யாணம் செய்துக்குறதுக்காக சொன்னது இல்லை. உன்ன கஷ்டப் படுத்த சொன்னது! எப்படியும் கீதா அண்ணி உன் கிட்ட சொல்வாங்கன்னு தான் அப்படி சொன்னேன்... மத்தப்படி வேறு யாரா இருந்திருந்தாலும் ஏதாவது சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகி இருப்பேன்...”

   

அவனின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் இந்து! சஞ்சீவ் புரியாமல் விழித்தான்!

   

“என்னடா லுக் விடுற? பொண்ணு பார்க்குறது உனக்கு விளையாட்டா? இவர் பார்த்து வேண்டாம்னு சொல்ல நினைச்சாராம்... எப்படி சஞ்சீவ் நீ போய் இப்படி எல்லாம் பேசுற?”

   

“நீ சொல்றது சரி தான் டார்லிங்... எனக்கே இப்போ அப்படி சொல்ல அசிங்கமா தான் இருக்கு... சாரிடா செல்லம்...”

   

“நான்

{/f90filter}

உனக்கு பிடிக்காததை செய்தா எனக்கு கண்டிஷன் எல்லாம் போட்டு கஷ்டப் பட வைப்ப... உனக்கு மட்டும் ஒரு சாரி’யோட நான் விட்டுறனுமா?”

   

“சரி, ஏதாவது தண்டனை கொடு...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.