"துளசி, குழந்தை கண் முழிச்சிட்டா போலருக்கு..."
"நான் போய் பார்க்குறேன் அத்தை..."
துளசி வேகமாக உள்ளே செல்ல, காமாட்சி நந்திதாவிடம் பேசுவதை தொடர்ந்தாள்.
"நான் உன்னை இங்கே தங்க சொல்றது, உன் ஃப்ரென்ட்க்காக தான் நந்து..."
"துளசிக்காகவா?"
"ஆமாம்! இந்த பையன் இருக்கானே ரொம்ப பொசசிவ்! துளசியை எங்கேயும் அனுப்புறதில்லை... சின்னத்தம்பி பட குஷ்பூ போல வீட்டிலேயே பிடிச்சு உட்கார வச்சிருக்கான். அவ பேசுறது பழகுறது என் கூட மட்டும் தான்... அவங்க அம்மா கிட்ட கூட ஃபோன்ல பேசுறது தான்..."
"ஓ..."
"நீ இங்கே தங்கி இருந்தா அவளுக்கு துணையா இருக்கும்... பாவம்ல அவ?"
"அது...."
"அங்கிள் நேத்தே என் கிட்ட சொல்லிட்டார்..."
"எது, டின்னர் டைம்ல உங்க கிட்ட கண்ணுலேயே பேசினாரே அது தானா???"
"அம்மாடியோ, எமகிராதகி நீ... இதை எல்லாம் வேற கவனிச்சீயா?"
"பின்ன, சீனியர்ஸ் உங்க ரொமான்ஸ் எல்லாம் மிஸ் செய்வோமா?"
நந்திதாவின் மற்றொரு காதை திருகிய காமாட்சி,