"துளசி செஞ்சது தப்பே இல்லை! நீ பயங்கரமான ஆள் தான்!" என்றாள்.
"ஐயோ ஆன்ட்டி வலிக்குது விடுங்க..." என நந்திதா அலறிக் கொண்டிருக்கும் போது துளசி குழந்தையுடன் அங்கே வந்தாள்.
நந்திதாவின் அலறலை கேட்டு அழுதுக் கொண்டிருந்த சாஹித்யாவும் அழுகையை நிறுத்தி பார்த்தாள். அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பும் தோன்றியது!
அதை கவனித்த துளசி, "இது நல்ல ஐடியாவா இருக்கு அத்தை! உங்க பேத்தி தூங்கி எழுந்த உடனேயே அழுகையை நிறுத்தி பார்த்திருக்கீங்களா, இப்போ பாருங்க! நந்துவோட அலறலைக் கேட்டு என் செல்லம் சிரிக்குறதை," என்றாள் குதூகலத்துடன்.
கண்களை உருட்டிய நந்து, "அடப் பாவிங்களா குடும்பமே டெரர் குடும்பம் போல இருக்கே! இதுக்கு தானா என்னை இங்கே தங்கு தங்குன்னு கேட்டுட்டு இருக்கீங்க?" என்றாள்!
"யாரும் உன் கிட்ட கேட்கலை, நந்து! நீ இங்கே தான் தங்குற! அது முடிவான விஷயம்... நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா, நான் அந்த பொருளை எல்லாம் எடுத்துட்டு போய் வைக்க சொல்றேன்," என்றாள் காமாட்சி திடமான குரலில்.
"ஆன்ட்டி..."
மிரட்டுவதுப் போல் கை விரலை காட்டிய காமாட்சி, "இதுக்கு மேல இதை பத்தி எதுவுமே பேசாதே..." என்றாள்.
துளசி பக்கம் பார்த்த நந்திதா, அவள் முகம் மலர இருப்பதை பார்த்து விட்டு, அவளிடமும் உதவி கிடைக்காது என்பதை புரிந்துக் கொண்டாள்.
எனவே, "சரி ஆன்ட்டி..." என்றாள் அரை மனதுடன்.