(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

❀✿❀✿❀✿

   

டின்னருக்கு பிறகு, காமாட்சியிடம் இரவு நேர மருந்து உண்ண நினைவு படுத்தி விட்டு நந்திதாவின் அறைக்கு வந்தாள் துளசி.

   

நந்திதா அவளின் மொபைலில் எதையோ நொண்டிக் கொண்டிருந்தாள்.

   

"என்ன செய்ற நந்து?"

   

"எனக்கு வந்திருக்க புது ஃபோபியாவுக்கு பேரு என்னன்னு தேடிட்டு இருக்கேன் ஒசிமம்... சோஷியல் ஃபோபியா...."

   

"ஃபோபியாவா?"

   

"ஆமாம்! காலையில ஆஃபிஸ் போனதுல இருந்து யாரோ என்னை பார்த்துட்டே இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்! நான் பார்த்த வரைக்கும் யாரும் அப்படி பார்க்குற மாதிரி தெரியலை..."

   

"இன்னைக்கு சாரீல ரொம்ப அழகா இருந்தீயே, ஆஃபிஸ்ல ஒருவேளை உனக்கு சீக்ரட் அட்மைரர் யாராவது இருக்காங்களோ என்னவோ," என்றாள் துளசி புன்னகையுடன்.

   

"ப்ச்.... அதெல்லாம் இல்லை... ஆனால் நினைச்சதை விட இந்த வேலை ரொம்ப சுவாரசியமா இருக்கும் போல இருக்கு... எம்.டி கூட நிறைய எதிர்பார்ப்பு இருக்குன்னு சொன்னார்..."

   

"எம்.டின்னா உதயா?"

   

"ஆமாம் அவரே தான்..."

   

நந்திதாவின் பேச்சில் உதய்க்கு ஏறி இருந்த மரியாதையை மனதினுள் குறித்துக் கொண்டாள் துளசி.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.