(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

"ஆனால் நந்து, இன்னும் அந்த கம்பெனி சின்ன அளவில தான் இருக்கு... இன்னும் வளரனும்..."

   

"அப்படி சொல்லாத ஒசிமம்! யோசிச்சு பாரு, சரத்க்கு அங்கிள் ஒரு பேஸ் (base) மாதிரி போட்டுக் கொடுத்திருந்தார்... அதை எடுத்து நடத்துறதும் கஷ்டம் தான் ஆனாலும் ஒரு பிளாட்ஃபார்ம் இருந்தது. உதய்க்கு அபப்டி இல்லையே! அவரே புதுசா ஆரம்பிச்சு, ரொம்ப நல்லா கொண்டு வந்திருக்கார்... கம்பெனில ப்ராசஸ் எல்லாம் பக்காவா இருக்கு... ஒவ்வொரு விஷயத்திலேயும் மைன்யுட் டீடைல் வரைக்கும் பார்த்து யோசிச்சு முடிவு செய்றாங்க... வேலை செய்றவங்களுக்கு நிறைய ஃப்ரீடம் இருக்கு..."

   

"போதும் போதும் உன்னோட புகழ் மாலை! எனக்கு தூக்கம் வருது, அப்புறம் பொறுமையா கேட்கிறேன்..."

   

"சரத் பார்க்க போகனும்னு சொல்லு, தூக்கம் வருதுன்னு ஏன் பொய் சொல்ற?"

   

"இப்படியே பேசிட்டு இரு, ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் காது என் கையோட வர போகுது பாரு! நல்ல பொண்ணா சீக்கிரம் படுத்து தூங்கு... குட் நைட்..."

   

"குட் நைட்... ஆனால் எனக்கு தூக்கம் வரலைப்பா..."

   

"சும்மா எதையாவது யோசிக்காமல் தூங்கு... அத்தையே உன்னை இங்கே தங்க சொன்னது சந்தோஷமா இருக்கு நந்து... நான் கேட்டிருந்தாலும் அவங்க சரின்னு சொல்லி இருப்பாங்க, ஆனால் அவங்களே உன்னை தங்க சொனனது ரொம்ப ஸ்பெஷல்..."

   

"ஸ்பெஷல் தான் ஆனால் எனக்கு இல்லை உனக்கு..."

   

"என்னது?"

   

"உனக்கு பேச்சு துணைக்கு ஆளே இல்லையாம்! தனியா இருக்கேன்னு என்னை தங்க சொன்னாங்க..."

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.