கொண்டு, செய்கையால் ஆம் என்று சொல்லாமல் சொன்னாள்!
அவளின் செய்கையில் மனம் குளிர்ந்தவனாக அவளின் அருகே இன்னமும் நெருங்கி கொண்டான் சஞ்சீவ்!
ஒரு சில வினாடிகள் அமைதியில் கரைய, “பாவம் வீணா....” என்றான் சஞ்சீவ்.
“இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம அவளைப் பத்தி பேசுற?” புரியாமல் கேட்டாள் இந்து.
“இல்ல... காலைல டிஃபன் எடுக்க போனப்போவே வீணா இருந்தாங்க... எனக்கு பர்த்டே விஷ் செஞ்சாங்க... கிஃப்ட் கொடுத்தாங்க... உன்னை பார்த்து பேசிட்டு தான் கிளம்பனும்னு சொன்னாங்க... அப்போ இன்னும் அங்கேயே தானே இருப்பாங்க?”
“அடப் பாவி ஏன் இதை முன்னாடியே சொல்லலை?”
“நான் சொல்ல நினைச்சப்போ தான் நீ குளிச்சு ஃபிரெஷ்ஷா வந்தீயா...”
அவன் மீது பறந்து வந்து விழுந்த மொபைலில் பேச்சை பாதியில் நிறுத்தியவன்,
“அநியாயமா இருக்கு... முதல் நாள் பார்த்தப்போ, இன்டீரியர் டெகரேஷன் பத்தி பேசி அவ்வளவு சாஃப்ட் அன்ட் ஸ்வீட் பொண்ணா தெரிஞ்ச அதே இந்து தானா நீ? ராட்சஸி!”
“உன்னை என்ன செய்றது.... ஐயோ வீணா என்னை இன்னைக்கு கேலி செஞ்சே க்ளோஸ் செய்துடுவாளே!”
🌼🌸❀✿🌷
இந்து வீ
{/f90filter}
ணாவை சந்தித்தப் போது, மதியம் இரண்டு மணி ஆகி இருந்தது.
“குட் மார்னிங் இந்து, இவ்வளவு சீக்கிரம் உனக்கு விடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...” என்றாள் வீணா கிண்டலாக.