(Reading time: 6 - 11 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“ஓ, குட்!” என்றான் சஞ்சீவ் ஆச்சர்யத்துடன்!

   

கட்டாயம் அவர்களின் முடிவுக்கு பின் இந்துவும் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றவும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த மனைவியை மதிப்பும், ரசனையும், காதலுமாக பார்த்தான்!

   

அவளும் பேச்சின் நடுவே அவன் பக்கம் பார்த்தாள்! அவனின் பார்வையை கவனித்து மெல்ல புன்னகைத்தாள்!

   

சஞ்சீவினுள் சிலிர்ப்பு உண்டானது! இப்போது மட்டுமல்லாமல் இனி வரும் ஒவ்வொரு நாளுமே இப்படி தான் இருக்கும் என்ற மகிழ்ச்சியினால் உண்டான சிலிர்ப்பு! 

   

 🌼🌸❀✿🌷

   

குடும்பத்தின் முதல் வாரிசை சுமந்துக் கொண்டிருந்த கீதாவை ராஜீவ் மட்டும் அல்லாமல் குடும்பத்தினர் அனைவருமே கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொண்டார்கள். அவளை மகாராணி போல நடந்தினார்கள். இரண்டு மருமகள்களும் காஞ்சனாவிடம் எப்போதும் போல் அன்புடன் நடந்துக் கொண்டனர். அர்ச்சனாவும் அவ்வப் போது வந்து மகளை பார்த்து விட்டு சென்றாள். வசந்தியும் கூட இப்போதெல்லாம் கீதாவை வந்து பார்த்து போவதாக இருந்தாள். அவளின் மறைமுக பேச்சுக்களை இந்து காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளாததால், எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை... இப்போதெல்லாம் அனைவருக்கும் வசந்தியின் பேச்சு பழக்கமாகியும் போய் இருந்தது!

   

மூன்று தோழியரும் திட்டமிட்டது போல புது கம்பெனி தொடங்கினார்கள். இந்து எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸ் பக்கம் தேவைக்கு மட்டும் சென்று வந்தாள், மற்றபடி நிர்வாக பொறுப்பை நந்தினியிடமே கொடுத்து விட்டாள். நந்தினி பெருந்தன்மையோடு கம்பெனியின் பங்குகளை திருப்பி கொடுத்திருந்த போதும், அது நந்தினிக்கு உரிமையானது என்று தான் இந்து நினைத்தாள். அவளுக்கு தான் அரச்சனாவின் கம்பெனி தவிர சஞ்சீவின் கம்பெ

{/f90filter}னியிலும் பங்கு இருந்ததே! சஞ்சீவுக்கும் இப்போது அதைப் பற்றி தெரிந்து விட்டதால், அவ்வப்போது அவனின் ஆஃபீஸ் பக்கம் சென்று அவனை செல்லமாக மிரட்டவும் செய்தாள், கொஞ்சவும் செய்தாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.