தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 14 - சசிரேகா
”டேய் ஈஸ்வரா என்னடா இதெல்லாம்” என சுலோச்சனா உக்கிரமாக கத்த அதில் ஈஸ்வரனோ பூங்கொடியை பார்த்து முறைத்துவிட்டு
”அம்மா அவள் பொய் சொல்றா” என்றான் அதைக்கேட்டு பூங்கொடி அதிர்ந்தாள்
உடனே அனைவரின் பார்வையும் இப்போது பூங்கொடி பக்கம் திரும்பியது
”என்னம்மா நீ காலையில இங்க வந்து தகராறு பண்றியா” என சுலோ கத்த
”அய்யோ இல்லை இது நிஜமாவே அவர் கட்டின தாலிதான் பாருங்க பாருங்க இது அவரோட பாட்டியோடது” என சொல்ல மூர்த்தி அந்த தாலியை உற்றுப் பார்த்துவிட்டு
”ஆமா இது எங்கம்மாவோடது இது எப்படி உன்கிட்ட” என சொல்லிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல
”பொய் சொல்லாதடா புள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன்” என உக்கிரமாக பேசிய மூர்த்தியை கண்டு திகைத்தவன்
”இருங்கப்பா இப்பவே வரேன்” என அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்று அங்கு தனது அலமாரியில் மறைத்து வைத்திருந்த போலி தாலியை எடுத்துக் கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுத்தால் கண்டுபிடித்துவிடுவார் என்பதற்காக தள்ளி நின்று தன் கையில் வைத்தபடியே காட்டினான்