இந்து உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். அப்படியே கீதாவை பாவமாக பார்த்தாள்.
அவள் எதிர்பார்த்ததுப் போலவே, “வீணா, சும்மா இரு... பாவம் அவ...” என வீணாவை அதட்டினாள் கீதா.
“ஆமா, ஆமா ரொம்ப பாவம் தான்...”
வீணாவின் கேலிப் பேச்சை தொடராமல், இந்துவிடம், “இந்து, சஞ்சீவை வர சொல்லு, சாப்பிடலாம்... உங்களுக்காக தான் நாங்க வெயிட் செய்துட்டு இருக்கோம்,” என்றாள் கீதா.
இந்துவும் நல்ல பெண்ணாக தலை அசைத்து எழுந்துக் கொள்ளவும், வீணா, “அவ்வளவு நல்ல பொண்ணா நீ... சஞ்சீவை மீட் செஞ்ச ஃபர்ஸ்ட் டே என்ன சொன்ன, எனக்கு எந்த சஞ்சீவை பத்தியும் தெரிய வேண்டாம், எந்த குரங்கை பத்தியும் தெரிய வேண்டாம்ன்னு தானே? அது அந்த குரங்குக்கு தெரியுமா?” என வீணா தன் கேலியை தொடர்ந்தாள்!
“இப்படியே நீ பேசிட்டு இரு, அப்புறம் உன் விஷயத்தை எல்லாம் அவினாஷ் கிட்ட போட்டு கொடுத்துருவேன்...” என இந்துவும் சொல்ல, அவர்களின் அரட்டை தொடர்ந்துக் கொண்டே இருந்தது!
எப்போதும் போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசி சிரித்தப்படியே தோழிகள் மூவரும் உணவு உண்பதை ரசித்தப்படி காஞ்சனாவும், சஞ்சீவும் உணவு உண்டார்கள்.
நடுவே நினைவு வந்தவனாக, “
{/f90filter}
அம்மா, கலாவும், கண்மணியும் எங்கே?” எனக் கேட்டான் சஞ்சீவ்.
“கலா எம்சிஏ, நம்ம கண்மணி எம்பிஏ படிக்க போறாங்களாம்.... அதுக்கு ஃபார்ம் வாங்க போயிருக்காங்க...”