(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

சுமித்ரா பதில் ஒன்றும் சொல்லாமல் பூங்கோதையை பார்த்தாள்...

   

புரிந்துக் கொண்டவளாக, “அவக் கிட்ட எல்லாம் அப்படி தான் பேசனும் சுமி.... உனக்கு சப்போர்ட் செய்து பேசி நாம ஒத்துமையா இருக்கோம்னு காமிச்சேன்னு வை, அவ்வளவு தான், கண்ணு போட்டுடுவா...” என்றாள் பூங்கோதை.

   

“ப்ச்... விடுங்க அத்தை...”

   

“இப்போ கூட திருஷ்டி சுத்திப் போடனும், அவ உன்னை பார்த்த பார்வையிலயே கண்ணு பட்டிருக்கும்...”

   

சுமித்ரா கையில் இருந்த பளிச்சிடும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரத்தை எடுத்து அதில் பிம்பமாக தெரிந்த தன் முகத்தை பார்த்தாள். அதுவும் பளிச்சென்று தான் இருந்தது....

   

நல்லவேளை கவிதா பக்கத்தில் இல்லை, இருந்திருந்தால், கிண்டல் செய்திருப்பாள் என்ற சிந்தனையுடன் அங்கே இருந்த சின்ன கடிகாரத்தை பார்த்தாள்.

   

அது நேரம் ஐந்தரை என்றது...

   

“அவங்க கதையை விடுங்க அத்தை, கவிதா எங்கே? இன்னுமா காலேஜ்ல இருந்து வரலை?”

   

“கவிதாவா? இதோ இருக்காளே, நீ கவனிக்கலையா??? ஹேய் கவி... கவி என்னடி செய்ற?”

   

பூங்கோதை பார்த்த திக்கில் திரும்பி பார்த்தாள் சுமித்ரா.

   

எப்போதும் வாயாடிக் கொண்டிருக்கும் கவிதா, கப்பல் கவிழ்ந்து விட்டதை போல கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

   

“ஹேய் கவி... கவி....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.