“மத்தவங்க எல்லாம் முன்னாடி நடந்துட்டு இருந்தாங்க... ஸோ, என் கூட வந்துட்டு இருந்த ஜெய் எனக்கு ஹெல்ப் செய்ய என் சப்பல் எடுத்தப்போ...”
“உன் அண்ணன் பார்த்துட்டாரா???”
“ஆமாம், சரியா அந்த நேரத்துல எங்கே இருந்து தான் வந்தானோ... சும்மாவே குரங்கு மாதிரி உர்ருன்னு இருப்பான்... அப்போ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தான்... அவன் பார்த்த பார்வையில நான் பஸ்மம் ஆகாம இருந்தது தான் அதிசயம்...”
சுமித்ராவும் பூங்கோதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்....
“நல்ல வேளையா அவன் கூட கோட் சூட் போட்ட யானைக் குட்டி மாதிரி ஒருத்தர் இருந்தாரா, ஒன்னும் சொல்லாம அவர் கூட போயிட்டான்... ஆனால், அவன் பார்த்த அந்த பார்வையே அவன் தப்பா புரிஞ்சுக் கிட்டான்னு சொல்லிச்சு...”
“இவ்வளவு தானா, விடு கவி... நீ எதுவும் தப்பு செய்யலையே... அப்புறம் என்ன?”
“உங்க கிட்ட நான் நடந்ததை சொன்னேன் அண்ணி... நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க... ஆனா ஹிட்லர் பேசவிட்டா தானே புரிய வைக்குறதுக்கு... என்னன்னு கேட்காமலே கன்னாபின்னான்னு திட்டுவானே...”
அந்த நேரம், “கவிதா...” என்ற உறுமல் கேட்டது...
கவிதா கொஞ்சம் பயத்துடன் எழுந்து நின்றாள்...
அந்த உறுமலுக்கு சொந்தக்காரனான கமல் வேகமான நடையுடன் அங்கே வந்து நின்றான்.
அங்கிருந்த மூன்று பேரையும் ஒரு பார்வை பார்த்தவன், கவிதாவை பார்த்து முறைத்தான்...