பூங்கோதை அழைப்பது கவிதாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை...
சமையலறையை விட்டு வெளியே சென்று கவிதாவை மெல்ல தட்டினாள் சுமித்ரா.
“என்ன ஆச்சு கவி??? எந்த கப்பல் கவிழ்ந்துப் போச்சு???”
திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்த கவிதா, சுமித்ராவைப் பார்த்து திருதிருவென விழித்தாள்.
“என்ன முழிக்குற??’
“அண்ணி, நல்லா மாட்டிக் கிட்டேன்...’
“மாட்டிக் கிட்டீயா யார் கிட்ட மாட்டின? காலேஜ்ல ஏதாவது தப்பு செய்தீயா???”
“ஐயோ, அதுக்கு எல்லாம் யாராவது கவலைப் படுவாங்களா... நான் நம்ம வீட்டு ஹிட்லர் கிட்ட மாட்டிக் கிட்டேன் அண்ணி...”
“ஹிட்லர் கிட்டேயா??? என்னடி சொல்ற???” என்றப்படி அவர்களின் அங்கே வந்தாள் பூங்கோதை.
“ஆமாம்மா, இன்னைக்கு ஜெய்யோட பர்த்டே... ட்ரீட் தரேன்னு காஃபி டேக்கு அழைச்சிட்டு போனான்....”
“உன்னை மட்டுமா இன்வைட் செய்தான்???”
“இல்ல இல்ல, எங்க செட் முழுக்க தான்... அங்கே போய் அரட்டை அடிச்சு, கலாட்டா செஞ்சுட்டு கிளம்பி வரும் போது, என்னோட சப்பல் பிஞ்சு போச்சு...”
“அப்புறம்?”