(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”பொண்ணு அழகாயிருக்குல்ல, கண்டிப்பா எவனாவது இருப்பான், அதனாலதான் கல்யாணமே வேணாம்னு மாப்பிள்ளை கிளம்பிட்டாப்ல“

   

”பணக்கார வீட்ல இது போல தப்பான விசயங்கள் நடக்கறது எல்லாம் சகஜம்தானே“

   

”இந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கலை“

   

”அதிர்ஷ்ம் இல்லையோ என்னவோ“

   

“பணக்காரியா இருந்தா போதாது, கொஞ்சமாவது அதிர்ஷ்டமானவளா இருக்கனும், இப்ப பாரு கல்யாணம் நின்னுடுச்சி, இனி இவளை யார் கல்யாணம் பண்ணிக்குவா”

   

“சொந்த ஊர்லயே விலை போகாததாலதான் இந்த ஊர்ல கல்யாணம் பேசினாங்க, இனி எந்த ஊர்லயும் இவளுக்கு மாப்பிள்ளை கிடைக்கப் போறதில்லை“

   

என அங்கிருந்தவர்கள் யுக்தாவைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேச அதைக் கேட்டவளால் நடக்க கூட முடியவில்லை, உடல் அதிர்ந்தது ஆனாலும் தன் தந்தையை காணும் நோக்கத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடந்தாள்.

   

மண்டப வாசலில் அவளின் தாய் இருந்தார்

   

”அம்மா என்னம்மா இது“ என கேட்க அவரோ பதிலே சொல்லாமல் ஓவென அழவும் அவளுக்கு ஒருமாதிரியாகிவிட்டது

   

”அப்பா எங்கம்மா” என கேட்க அவரோ கைகாட்டினார்.

   

அவர் காட்டிய இடத்தில் அவளின் தந்தை சிவசங்கரன் கண்களில் கண்ணீரோடு தான் பார்த்த மாப்பிள்ளையின் முன் கைகூப்பி கெஞ்சிக் கொண்டிருந்தார்.

   

இன்னும் விட்டால் அவனின் காலைக் கூட பிடித்துவிடுவார் போல, அந்தளவு முதுகை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.