(Reading time: 6 - 11 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 03 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சத்யா எதிர்பார்த்ததுப் போலவே தேன்மொழி தான் அங்கே யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்...

   

அவனுடைய மனதை பிரதிபலிப்பதுப் போல ஆர்கெஸ்ட்ரா பாடலும் ஒலித்தது...

  

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரில் பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்ட பெண்ணா திரும்பி திரும்பிப் பார்க்கிறேன்..."

   

தேன்மொழி மேல் நிலைத்திருந்த அவனின் பார்வை சத்யாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது. 

   

அதுவரை அவனுக்கு பெண்கள் பக்கம் ஆர்வம் சென்றதே இல்லை, அவனுடைய பிஸ்னஸ் தவிர மற்ற எதை பற்றியும் அவன் மனம் சிந்தித்ததும் இல்லை. 

   

கண்களை அகற்ற முடியாமல் அவன் பார்த்துக் கொண்டே இருக்க, தேன்மொழி எதேச்சையாக அவன் பக்கம் பார்த்தாள்...

   

அவள் கண்களில் வந்த மெல்லிய அதிர்வு, அவளும் அவனைக் கண்டுக் கொண்டாள் என்பதை அவனுக்குச் சொன்னது...

   

சத்யாவின் விரல்கள் தானாக அவனின் உதடுகளை வருடியது...

   

சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள் தேன்மொழி...

   

புன்னகை மின்ன அப்போதைக்கு பார்வையைத் திருப்பினாலும், சத்யாவின் பார்வை மீண்டும், மீண்டும் தானாக தேன்மொழி பக்கம் சென்று வந்தது...

   

ஆனால் தேன்மொழி அவன் பக்கம் பார்க்காமலே இருந்தது அவனுக்கு உறுத்தலாக இருந்தது... ஒருவேளை அவளுக்கு அவனை பிடிக்கவில்லையோ???

   

✽✽✽

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.