(Reading time: 6 - 11 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

   

"இல்லை ஆன்ட்டி! அவ இப்போதைக்கு கரியர் தான் முக்கியம்னு சொல்றா... இவர் இப்போதே பார்க்கனும்னு தான் சொல்லிட்டு இருக்கார். அத்தைக்கும் சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் செய்ய ஆசை தான்..."

   

படிப்பு, உடனே திருமணம் என்று சராசரி பெண்ணாக தேன்மொழி இல்லாது இருந்தது சத்யாவுக்குப் பிடித்திருந்தது!

   

அவளை திருமணம் செய்துக் கொள்ளா விட்டால் அவனுடையே வாழ்வே சூன்யமாகி விடும் என்று தோன்றியது. 

   

ஒரு சில மணி நேரத்தில் அவன் மனதில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால அவனை மொத்தமாக வீழ செய்திருந்தாள் தேன்மொழி.

   

அந்த திருமண மண்டபத்தை விட்டு கிளம்பும் போது மனமே இல்லாமல் தான் கிளம்பினான்...

   

✽✽✽

   

நாட்கள் மெல்ல நகர்ந்தன...

   

அம்மா எப்போதும் போல அவனுடைய திருமண பேச்சை எடுப்பதற்காக காதுகளை கூர்மையாக வைத்துக் காத்துக் கொண்டிருந்தான் சத்யா...

   

ஹுஹும்... அவர்கள் அந்தப் பேச்சை எடுப்பதாகவே தெரியவில்லை!

   

அன்றுக் காலை உணவாக ஈஸ்வரி இட்லியை பரிமாறவும்,

   

“என்னம்மா இன்னைக்கும் இட்லியா?” என்று பொய்யாக அலுத்துக் கொண்டான் சத்யா.

   

“என்னை என்ன செய்ய சொல்ற சத்யா? இது தான் எனக்கு ஈசியா இருக்கு... சமையலுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.