மணமக்களுக்கு பரிசு கொடுத்து வர ஈஸ்வரி கிளம்பியப் போது அரை மனதுடன் கூடச் சென்றான் சத்யா!
பரிசைக் கொடுக்க அவர்கள் வரிசையில் நின்றப் போது,
“ஈஸ்வரி ஆன்ட்டி!” என குதூகலத்துடன் ஒரு குரல் கேட்டது.
இருவரும் திரும்பி பார்க்க, அங்கே மஞ்சரி நின்றிருந்தாள்! அவள் பக்கத்தில் இருந்தது தேன்மொழியே தான்!
மஞ்சரியின் அம்மாவும், ஈஸ்வரியும் நெருங்கிய தோழிகள். மஞ்சரிக்கும் ஈஸ்வரியிடம் நல்ல பரிச்சயம் இருந்தது.. அதனால் தான் அவரைப் பார்த்த உடன் மகிழ்ச்சியுடன் தானாகவே வந்துப் பேசினாள் மஞ்சரி.
சத்யாவின் கண்கள் வண்டாக தேன்மொழியையே மொய்த்தது... அவனால் நடப்பதை நம்பவே முடியவில்லை! இதுவரை அவன் அவளை சந்தித்ததே இல்லை...
இன்று தான் முதல் முதல் சந்தித்தான்...
ஆனால், அது என்னவோ எந்த பக்கம் திரும்பினாலும் அவளே வந்து நிற்கிறாளே! இதன் அர்த்தம் என்ன???
‘அவள் உனக்கானவள்டா, முட்டாள்!!!!’ என அவனின் மனம் அவனுக்கு பதில் சொன்னது...
மஞ்சரியும், ஈஸ்வரியும் பல நாள் கழித்து சந்தித்ததால் வழக்கமான விசாரிப்புகளுடன் பேச்சை ஆரம்பித்தார்கள்... பின், தன் அருகில் நின்றிருந்த தேன்மொழியை அறிமுகம் செய்து வைத்தாள் மஞ்சரி.
“இவ அவரோட தங்கை ஆன்ட்டி. பேரு தேன்மொழி...” என்றவள், அப்படியே தேன்மொழியிடம்,