(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 25 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கட்டிலில் எழுந்து அமர்ந்த நந்திதா கண்களை இறுக மூடிக் கொண்டு மனதை ஒருநிலை படுத்த முயன்றாள் ஆனால் அது எளிதாக இல்லை...

   

சற்று முன் கண்டது கனவு என்பதை நம்புவதே அவளுக்கு அப்போதும் கடினமாக இருந்தது.

   

ஆனாலும் எதனால் இப்படி ஒரு கனவு?

   

அதுவும் உதயுடன்?????

   

துளசியிடம் இதை பற்றி சொன்னால் என்ன நினைப்பாள்?

   

ச்சே எப்படி இப்படி ஒரு எண்ணம் அவளுக்கு தூக்கத்தில் கூட வரலாம்???

   

குழம்பி போய் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவள், மெல்ல தன்னிலைக்கு வந்தாள்.

   

அடுத்து செய்ய வேண்டியதை பற்றி யோசித்தவள், தேவைக்கு அதிகமாக உதயுடன் பேசாமல் இருப்பது என்று முடிவு செய்தாள்!

   

மறுநாள், மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு செல்லும் போதும் மீண்டும் மீண்டும் இரவில் எடுத்த முடிவை நினைவுப்படுத்திக் கொண்டே சென்றாள் நந்திதா.

   

அலுவலகத்தில் தன்னுடைய அறையை அடைந்தவள் வேலையினுள் தன்னை புகுத்திக் கொண்டாள். எப்போதும் போல மற்ற துறை சார்ந்த மீட்டிங்குகளுக்கு செல்லாமல், வேலை இருப்பதாக சொல்லி அங்கேயே நேரத்தை கடத்தினாள்.

   

அவளுடைய ஆர் & டி டிபார்ட்மெண்டுக்கு என்று வந்திருந்த ரெஸ்யூம்களை அவள் அலசிக் கொண்டிருந்த நேரம்,

   

“ஹாய் நந்திதா....” என்ற அழைப்புடன் அவளின் அறைக்குள் வந்தான் உதய்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.