(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

அவசரமாக தன் மனதினுள் எடுத்திருந்த முடிவை நினைவுபடுத்திக் கொண்டு, அவனின் கண்களை நேராக பார்க்காமல் விழிகளை தழைத்துக் கொண்டு உதயை பார்த்த நந்திதா திகைத்துப் போனாள்.

   

உதய் வெளீர் நிறத்தில் கோடுகள் போட்ட சட்டையில் கம்பீரமாக ‘நிஜமாகவே’ அவள் முன் நின்றிருந்தான்.

      

உதயிற்கு நந்திதாவின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை பார்க்க சுவாரசியமாக இருந்தது.

   

“நந்திதா? ஆர் யூ ஆல்ரைட்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

   

நந்திதாவிற்கு உதயை அந்த சட்டையில் பார்க்கும் அதிர்ச்சியில் இருந்து சட்டென்று  வெளியே வர முடியவில்லை.

   

“நோ உதய்...  இல்லை ஐ ஆம் ஃபைன்... இந்த ஷர்ட்...” என்று உளறியவள் அத்துடன் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

   

உதயிற்கு என்ன ஏது என்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.

   

“ஷர்ட்? இந்த ஷர்ட்??? இது என்னோட ஃபேவரைட் ஷர்ட்.... இதை பார்த்தா இப்படி பயப்படுறீங்க? அவ்வளவு மோசமாவா இருக்கு?”

   

அவன் சாதாரணமாக பேச, நந்திதாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

   

“ஷர்ட் பத்தி சொல்லலை உதய்... அது சாரி...”

   

“ஹேய் கம் ஆன்... இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்... ஸீ, வீ ஆர் அ ஃபேமிலி ஹியர்.... இந்த டிரஸ் நல்லா இருக்குன்னு காம்ப்ளிமென்ட் செய்றது.... நல்லா இல்லைன்னு உண்மையை சொல்றது எல்லாம் தப்பே இல்லை...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.