(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 11 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஹேமாவின் முகத்தில் மெல்லிய புன்னகை உதயமானது!

   

“அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா சுமி... நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ,” என்றாள் அவள்!

   

“பொய் சொல்லாதே ஹேமா,” என்றாள் சுமித்ரா.

   

“பொய்யா??? ஏன்???”

   

“நான் ஒரு வாரம் வரலை... கமல் வேற வந்து பேசினார்ன்னா... என்ன ஏதுன்னு கேட்காம இருந்திருக்க மாட்டீயே நீ... நீ எவ்வளோ நல்ல ஃப்ரெண்ட்ன்னு எனக்கு தெரியும்...”

   

“ம்ம்ம்... பரவாயில்லையே...! கேட்டேன்... கேட்காமல் என்ன! ஆனாலும் நம்ம ஃப்ரெண்ட் இவ்வளோ சைல்டிஷான்னு இருந்தது... அதான் மேலே அதை பத்தி பேசலை...”

   

“சரி நானே கமல் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறேன்...” என்றாள் சுமித்ரா சந்தோஷம் கொப்பளிக்க...

   

அவளின் குதூகலத்தை பார்த்து ஹேமாவிற்கும் சந்தோஷமாக தான் இருந்தது... ஒரு சில வினாடிகள் தோழியை பார்த்து ரசித்தவள், பின்,

   

“ஆனால் சுமி... நல்லா யோசிச்சு தானே கமலை செலக்ட் செய்திருக்க?” எனக் கேட்டாள்.

   

சுமித்ரா கேள்வியாக பார்க்க...

   

“இல்லைப்பா... அவர் நீ சொன்னது போல ஓகேன்னு தான் தோணுது... அவர் அம்மாவும் நல்ல டைப்... ஆனால் அப்பா சரி இல்லையே... சின்னதா தம்பி, தங்கை வேற இருக்காங்க... அவங்களை எல்லாம் கரை சேர்த்துட்டு நீங்க எப்போ செட்டில் ஆகுறது....? அதை பத்தி எல்லாம் யோசிச்சீயா???”

   

சுமித்ரா உடனே பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.