“தப்பா எடுத்துக்காதே சுமி... நீ பின்னாடி நினைச்சு வருத்தப் படக் கூடாதே அதுக்கு தான் கேட்டேன்...”
“என்ன ஹேமா, இதெல்லாம் நீ சொல்லனுமா??? நீ சொல்றது சரி தான்... ஒரு வேளை நீ இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தா நானும் கூட உன்னை மாதிரி தான் சொல்லி இருப்பேன்... ஆனால்... கமல் கூட இருந்தா என்னால எதையும் பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை இருக்குப்பா... அது ஏன் என்னன்னு எல்லாம் என்னால விவரிக்க முடியலை... அனால் அவர் இல்லாம இருக்க வாழ்க்கையை பத்தி யோசிக்க கூட எனக்கு பிடிக்கலை...”
“இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு ஆனால் எப்படி சுமி??? நீ அவரை ஒரு பத்து தடவை பார்திருப்பீயா? இரண்டு மூனு தடவை பேசி இருப்பீயா???”
“ஹ்ம்ம்... ஆமாம்... ஹேமா.... ஆனால் நான் அவரை முதல் நாள் பார்த்தப்போ அவருக்கு ஆறுதலுக்காக இரண்டு வார்த்தை சொல்ல, எனக்கா ஆறுதல் சொன்னன்றது போல ஒரு விதமாய் பார்த்தார் பார்... அந்த கண்ணுல இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு இது தான் என்னை அவர் கிட்ட முதல்ல பான்ட் செய்தது... அன்புக்காக ஏங்ககுற குழந்தைப்பா அவர்... அவருக்கு போதும், போதும்னு சொல்ற அளவுக்கு அன்பை வாரிக் கொடுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு...”
“ஹ்ம்ம்...!”
“என்ன?”
“இல்லைடி எப்போவும் வில்லி ரேஞ்சுக்கு பணக்கார பையனா பார்த்து கல்யாணம் செய்து லைஃப்ல செட்டில் ஆக போறேன்னு சொல்லிட்டு இருந்த நீ, இப்படி ஒரே ஒரு சந்திப்புல ஹீரோயினா மாறிட்டீயேன்னு ஆச்சர்யப் படுறேன்...”
“அந்த கதைலாம் இருக்கட்டும்... கமல் உன் கிட்ட என்ன பேசினார் அதை சொல்லு....”