எப்படியோ தடுமாறி சென்றால், அவன் மற்றவர்களை போல் உடனே காஃபியை எடுத்துக் கொள்ளவில்லை...
என்ன செய்வது என்று புரியாமல் நிமிர்ந்து பார்த்தால், அவன் அத்தனை பேரின் முன்னிலையில் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...
அந்த பார்வையினால் ஏற்பட்ட வெட்கத்தையும் மீறி அவளினுள் ஒரு விதமான நிம்மதி ஏற்பட்டது...!
பெற்றோர், தோழி என் யாருமே கொடுக்க முடியாத நிம்மதி...!
கமல் வந்து விட்டான்... அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையினால் வந்த நிம்மதி...
“க்கும்...! காஃபி எடுத்துக்கோங்க கமல் சார்,” என ஹேமா சொல்ல, சின்ன அசட்டு சிரிப்புடன் காஃபியை எடுத்துக் கொண்டான் கமல்...
“என்னப்பா கமல் பொண்ணு பிடிச்சிருக்கா????” என பூங்கோதை அவனின் காதில் கிசுகிசுத்தது, சுமித்ராவிற்கும் கேட்டது...
“பிடிச்சிருக்கும்மா,“ என சத்தமாகவே சொன்ன கமல், கூடவே,
“நான் அவங்க கிட்டக் கொஞ்சம் தனியா பேசனும்...” என்றான்.
அடுத்த சில நிமிடங்களில், அவளின் அறையிலேயே அவர்கள் இருவரும் தனியாக சந்தித்தார்கள்...!
வழக்கமான துடுக்குத் தனத்தை விட்டு விட்டு, வெட்கத்துடன் கையில் இருந்த வளையல்களை தொட்டு விளையாடி கொண்டிருந்த சுமித்ராவை காதலுடன் பார்த்துக் கொண்டு நின்ற கமல்,