(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“அதெல்லாம் உனக்கு எதுக்கு... என்...”

   

“ப்ளீஸ்டி... என் செல்லம்ல நீ...”

   

“ஹும்...! சொல்லாம விட்ருவீயா என்ன நீ!! நான் கிளினிக் மூடுற டைம்ல வந்து தயங்கி தயங்கி பேசினார்... உன்னை பத்தி கேட்டார்... நான் எதுக்கு கேட்குறீங்கன்னு கேட்டால், உன்னை விரும்புறேன்னு சொன்னார்...”

   

சுமித்ராவின் முகம் கோடி சூரியன்கள் சேர்ந்தது போல பளிச்சிட்டது...

   

அதை ரசித்தபடி தொடர்ந்தாள் ஹேமா...

   

“அவர் அப்படி என் கிட்ட நேரா சொல்வார்னு நான் எக்ஸ்பெக்ட் செய்யலை... கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது... அவருக்கு உன்னை அஞ்சு நாளா பார்க்காமல் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காம்...”

   

“அப்புறம்?”

   

“அவர் சொன்னா நான் அப்படியே நம்ப முடியுமா? அவர் எங்கே வேலை செய்றார், என்ன செய்றார்னு எல்லாம் கேட்டுட்டு, கிளினிக்ல வேலை செய்ற ராகவ் வச்சு விசாரிச்சேன்... உண்மையை தான் சொல்லி இருந்தார்... நீ வேற ஆல்ரெடி அரை லூசா சுத்திட்டு இருக்க... இதுக்கு மேல சும்மா இருக்க கூடாதுன்னு ஆன்ட்டி கிட்ட பேசினேன்... இனி ஜாதகம் வாங்கி தர வேண்டியது தான் பாக்கி...”

   

“தேங்க்ஸ்டி ஹேமா.... இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்...”

   

“ஹுஹும்...!!!!”

   

“ஏதாவது காலத்துல நீ கல்யாணம் செய்துப்பல அப்போ உனக்கு இதே மாதிரி ஹெல்ப் செய்றேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.