(Reading time: 8 - 16 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

ஆப்ரேஷன் முடிந்து தந்தை கண்விழிக்க எப்படியும் 24 மணி நேரமாகலாம், அதற்குள் தில்லையை சந்தித்து தனக்கான நியாயத்தை பெற வேண்டும், அவனை கேள்வி கேட்க வேண்டும் என நினைத்து தைரியமாக எழுந்து நின்றாள். 

   

அதைக் கண்ட அத்தை மகளோ

   

”எங்க போறக்கா” என கேட்க அதற்கு அவளோ பதிலே சொல்லாமல் செல்லவும் அத்தையோ

   

”விடு அவள் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆயிட்டு வருவா நீ ஏதாவது சாப்பிடறியா“

   

”இல்லைம்மா வேணாம்”

   

”பசிக்கலை உனக்கு“

   

”பசிக்குது ஆனா, யாருமே சாப்பிடலையே நான் மட்டும் எப்படி”

   

”நீ வா நாம கான்டீன்ல போய் சாப்பிட்டு எல்லாருக்கும் சாப்பாடு கொண்டு வருவோம், பசியோட இருந்தா யாருக்கு என்ன பிரயோசனம் சொல்லு, சாப்பிட்டு தெம்பா எல்லாருக்கும் உதவி செய்யலாம் சரியா” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட அவளை அழைத்துக் கொண்டு கான்டீன் சென்றார்.

   

அதைக் கண்ட கைலாசமோ அவர்களுடன் சம்யுக்தா இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கைக்கு துணையாக இருந்தார்.

   

இங்கு சம்யுக்தாவோ ஆஸ்பிட்டல் விட்டு வெளியேறியதும் சுற்றி முற்றிப் பார்த்தாள். அவளது கார் ட்ரைவர் அவளைக் கண்டதும் உடனே அவளிடம் வந்து நின்றார்

   

”சின்னம்மா என்னாச்சிம்மா ஐயாவுக்கு எப்படியிருக்கும்மா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.