தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 11 - சசிரேகா
குணசேகரன் வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென திகைத்தபடி இருக்க மிர்துளா வெளியே வந்தாள், அவளைக் கண்டதும் வந்தவர்கள் வாய் மூடிக் கொண்டார்கள். அவர்களுக்குள்ளே சலசலப்பாக பேசிக் கொள்ள அவளோ தாத்தாவிடம்
”தாத்தா இங்க என்ன நடக்குது, யார் இவங்க? எதுக்காக இங்க இருக்காங்க”
”அது ஒண்ணுமில்லை நீ இங்க இருக்கறதுக்கு காரணம் கேட்டு வந்தாங்க”
”நான் இங்க இருந்தா இவங்களுக்கு என்ன பிரச்சனை”
”இல்லைம்மா செழியன் இருக்கற வீட்ல வயசு பொண்ணு நீயும் இருக்கறல்ல அதான் ஊர்க்கார
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பு செய்றவங்க பயந்து ஒளிவாங்க, அவனை போல நேர்மையானவனை இந்த ஊர்ல எங்க தேடினாலும் கிடைக்காது”
”யாரு அவரா ஊருக்குள்ள வெட்டியா வளைய வந்துக்கிட்டு, சண்டித்தனம் செய்றவரையா வீரன்னு சொல்றீங்க, எங்க ஊர்ல எல்லாம் அடிதடி செய்ற ஆளை வீரன்னு சொல்லமாட்டாங்க, ரௌடின்னுதான் சொல்வாங்க”
”யாரைப் பத்தி இப்படி தப்பா பேசற, சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்கிறோம், விட்டா