“எதுக்கு ஆன்ட்டி கேட்குறீங்க?”
“நம்ம சத்யாவும் அதேப் போல கல்யாணம் இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு எப்போவும் சொல்வான்... இன்னைக்கு முதல் முறையா தேன்மொழி பேரைச் சொல்லி மஞ்சரி அக்கா கிட்ட பேசி பாருங்கம்மான்னு சொன்னான்...”
“சத்யாவா?” மஞ்சரியின் குரலில் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது...
“ஆமாம் மஞ்சு... சத்யாவைப் பத்தி உனக்கே தெரியும்... நல்ல பையன்... கெட்டப் பழக்கம் எல்லாம் எதுவும் இல்லை... நீ உன் வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டு, தேன்மொழியையும் கேட்டுச் சொல்றீயா??”
“இன்னைக்கு அவங்க இரண்டு பேரும் ஆஃபிஸ்ல இருந்து வந்த உடனேயே கேட்டுச் சொல்றேன் ஆன்ட்டி...”
அந்த உரையாடலை கேட்காததுப் போல ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சத்யாவின் மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது...
கடந்த சில நாட்களாகவே கண் முன் தோன்றி மறைந்துக் கொண்டிருந்த தேன்மொழியின் முகம் மீண்டும் முதலில் பார்த்த சிரிப்போடு அவனின் மனதில் ஊர்வலம் வந்தது.
எப்போது திருமண பேச்சை தொடங்குவார்கள்...
எப்போது மீண்டும் அவளை நேரில் பார்ப்பது... எப்போது அந்த சிரிப்பை பக்கத்தில் இருந்து ரசிப்பது??? எப்போது அவனை உரசிச் சென்ற அந்த உதடுகளை உரிமையுடன் ருசிப்பது....?
மஞ்சரியிடம் இருந்து நல்ல செய்தி வருவதற்காக காத்திருந்தான் சத்யா.
✽✽✽