(Reading time: 5 - 10 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

அன்றைய பகல் பொழுது முழுவதும் வேலையில் சத்யாவின் கவனம் செல்லவே இல்லை...

   

எப்போதடா வரும் என்று அவன் காத்திருந்த மாலை நேரம் வந்த உடனேயே, அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பினான்...

   

ஆனால், வீட்டுக்குள் அவன் நுழைந்தப் போது அவனின் காதில் விழுந்த பேச்சு, அமிலத்தை ஊற்றியதை போல் அவன் மனதை காயப் படுத்தியது!!!

   

"ஏன் மஞ்சு? சத்யாவை எப்படி அவளுக்கு பிடிக்காமல் போகும்?"

   

......

   

"இவன் ஒருவழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சானேன்னு சந்தோஷப் பட்டுட்டு இருந்தேன்... இப்போ அவ பிடிக்கலைன்னு சொன்னது தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவானே...."

   

......

   

"புரியுது மஞ்சு.... நீ சொல்றது சரி தான்... நாம கட்டாயப் படுத்தக் கூடாது தான்... சரி, மஞ்சு நான் அப்புறம் பேசுறேன்..."

   

அதிர்ந்து நின்ற சத்யாவால் நம்பவே முடியவில்லை!!!!

   

தேன்மொழிக்கு அவனைப் பிடிக்கவில்லையா?

   

அவனுடைய இதயம் சுக்கு நூறாக வெடித்து விட்டதைப் போல உணர்ந்தான் சத்யா...

   

இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லையே...

   

ஒருவேளை அவளுக்கு வேறு யார் மீதாவது காதல் ஏதாவது இருக்குமோ? 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.